×

ஏகாம்பரநாதர் கோயில் சிலை மோசடி வழக்கில் மிரட்டப்படும் சாட்சிகள்: ஐஜி பொன்.மாணிக்கவேலிடம் புகார்

செனை்ன: காஞ்சிபுரத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேலிடம் அளித்துள்ள மனு: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் உள்ள தொன்மையான உற்சவர் திருமேனியை செய்ததில் நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கில் புதிதாக செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் சிலையில் எள்ளளவு கூட தங்கம் சேர்க்கப்படவில்லை என்று அதிநவீன கருவிகள் கொண்டு செய்யப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதிதாக செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி சிலைகள் கோயிலில் இருந்து எடுத்து செல்லப்பட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் கோயிலில் வழக்கமாக நடைபெறும் உற்சவங்களை நிறுத்தி, உற்சவ உபயதாரர்கள் பொறுப்பில் உள்ள சொத்துக்களை கைப்பற்றி விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை இன்னும் தாக்கல் செய்யாத நிலையில் தங்கம் முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் கோயில் குருக்கள், செயல் அலுவலர் முருகேசன்  உள்ளிட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் ஆதாரங்களை அழித்தும், சாட்சிகளை கலைத்தும், மிரட்டியும் வருகின்றனர். எனவே இந்த வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Complainant witnesses ,IG Ponnu , Complainant,witnesses,scam case,Ekambaranathar temple: IG Ponnu
× RELATED திருஉத்திரகோசமங்கை கோயிலில் மரகத...